முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

கமலக்கன்னி அம்மன் கோவில் திருவிழா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம் பா.ஜ.க., இந்து முன்னணியினர் வெளிநடப்பு

Update: 2023-04-21 18:45 GMT

செஞ்சி

செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோவில் திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நெகருன்னிசா தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன், சப்- இன்ஸ்பெக்டர் சங்கராசுப்பிரமணியன், தொல்லியல்துறை இளநிலை பராமரிப்பு அலுவலர் நவீந்திரன், அறங்காவலர் அரங்கஏழுமலை, ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், விழா குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவிழா நாட்களில் குடி நீர் வசதி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல், தேர் செல்லும் சாலைகளை செப்பனிடுதல், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக செஞ்சி கோட்டையில் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்ட கமலக்கன்னியம்மன் சிலையை அகற்றிவிட்டு வேறு சிலையை நிறுவுவதற்கு அனுமதி வழங்காத தொல்லியல்துறையை கண்டித்து வெளி நடப்பு செய்வதாக கூறி கூட்டத்தில் இருந்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தாலுகா அலுவலகம் எதிரில் தொல்லியல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்