வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
லால்குடியை அடுத்த ஆலங்குடி மகாஜனம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார். இதில் 814 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். 12 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.