பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரித்த அலுவலர்களுக்கு பாராட்டு
பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரித்த அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நெல்லை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்தில், மின்மாற்றிகளை பழுது இல்லாமல் பராமரித்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மின் வினியோக செயற்பொறியாளர் வெங்கடேஷ்மணி (பொது), முத்துக்குட்டி (நகர்ப்புறம்), சுடலையாடும் பெருமாள் (கல்லிடைகுறிச்சி) மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் செய்து இருந்தார்.