கோவிலில் பிரதோஷ வழிபாடு

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-06-15 18:19 GMT

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தோகைமலை அருகே விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு தயிர், மஞ்சள், திருமஞ்சனம், தேன், பன்னீர் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நந்தி பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காட்டப்பட்டது. பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்