சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-08-13 17:41 GMT

  நஞ்சை புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதேபோல் காகிதபுரம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், நன்னீர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்