வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Update: 2023-06-01 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சிவபெருமான், ருத்ரகோடீஸ்வரராக கைலாச கோலத்தில் மேற்கு முகமாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் சிவபெருமான்- நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாமணி நாகநாதசாமி கோவில், பரவாக்கோட்டை நாகநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்