சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 18 வகையான பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.