அக்னீஸ்வரசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

அக்னீஸ்வரசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

Update: 2023-04-03 20:06 GMT

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது முன்னதாக நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் நீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கோவில்பத்து ஆபத்சகேஸ்வரசாமி கோவில், திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்