சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-11-21 18:39 GMT

கார்த்திகை மாத பிரதோஷம்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்

இதேபோல் மோகனூர் பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு பிரதோஷ விழா நடைபெற்றது. இந்தநிலையில் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் செய்து சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், இளநீர் உளபட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடந்தது. அதேபோல் மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 சங்காபிஷேகம்

பரமத்திவேலூரில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர் சாமி அருள்பாலிவத்து வருகிறார். இந்தநிலையில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி கார்த்திகை முதல் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை யாகவேள்வி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரருக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகமும் பிரதோஷ வழிபாடும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்