பிரதோஷ வழிபாடு
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது கோவிலின் முன்புறம் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் நீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மலர்களால் நந்தியம்பெருமான் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.