விளாத்திகுளம் கோவிலில் பிரதோஷ விழா

விளாத்திகுளம் கோவிலில் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-08-29 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத வளர்பிறையை முன்னிட்டு பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து எலுமிச்சை, தாமரைப்பூ, அருகம்புல், மாவிலை, எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை, உள்ளிட்ட பல வகையான மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செயதனர்.

Tags:    

மேலும் செய்திகள்