உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
கொண்டலாம்பட்டி,
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு நெய், பால், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு கரபுரநாதர் காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து கரபுரநாதர் நந்தி தேவர் மீது அமர்ந்த வண்ணம் கோவில் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவில் உத்தமசோழபுரத்தை சுற்றியுள்ள நெய்க்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, பூலாவரி, அரியனூர், பெரியபுத்தூர், சிவதாபுரம், சின்ன புத்தூர், வேடுகாத்தான்பட்டி, இளம்பிள்ளை, வீரபாண்டி, தம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.