உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திபெருமானுக்கு பால், தயிர், இளநீர், திரவியபொடி, பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்தி பெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.