தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு - பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-12 14:57 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். இந்த கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும் விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும்.

அதன்படி தற்போது பள்ளி இறுதித்தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டதில் இருந்து பெரியகோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதனால் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இந்த நிலையில் மாலையில் பெரியகோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பிரதோஷ வழிபாட்டிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்