சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது
திருவெண்காடு
சீர்காழி அருகே திருப்புன்கூரில் பிரசித்தி பெற்ற சிவலோக நாதர் கோவில் உள்ளது. பிரதோஷத்தையொட்டி இந்த கோவிலில் நேற்று மாலை சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு காப்பரிசி பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல, வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில், பிரசித்தி பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், அன்னப்பன்பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில், மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.