பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் பயிற்சி முதல்வர் அன்பரசி தலைமையில் நடைபெற்றது. இதில் துறைத்தலைவர்கள் அனைவரும் அவர்தம் துறைகளுக்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். முதல்வர் அன்பரசி பேசுகையில், மாணவர்கள் கல்வியோடு, தனிமனித ஒழுக்கத்தையும் பேண வேண்டும் என்றார். மாணவர்கள் பாடப்புத்தகங்கள் படிப்பதோடு, தங்களது தனித்திறனையும் மேம்படுத்திட வேண்டும் என்றார். மாணவர்களின் பெற்றோர்களும், துறைத்தலைவர்களும், உதவி பேராசிரியர்களும், கவுரவ விரிவுரையாளர்களும், அலுவலக பணியாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.