நேர்முக தேர்வுக்கு பயிற்சி

நேர்முக தேர்வுக்கு பயிற்சி

Update: 2023-01-31 18:38 GMT


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 2-ந்தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 13-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி நேர்முகத்தேர்வு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த மாதம் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு மாதிரி நேர்முக தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்