பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி
பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி பட்டறை நடைபெற்றது.
முதுகுளத்தூர்,
தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி பட்டறை முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய ஒன்றிய பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் முயற்சியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மே மாதம் 2 முதல் 4 வரை, 9 முதல் 11 வரை, 16 முதல் 18 வரை மற்றும் 23 முதல் 25 வரை ஆகிய நான்கு கட்டங்களாக பயிற்சிகள் நடைபெற உள்ளது. இதில் ஓவிய பயிற்சி, கதை எழுதுதல், நாடக பயிற்சி, கதை சொல்லுதல், காகிதம் படிப்பு, ஓலை மடிப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான எழுது பொருட்கள் மற்றும் மதிய உணவு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பாக வழங்கப்பட்டது.