இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கான பயிற்சி

இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது

Update: 2023-04-29 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கான ஆயிரம் அறிவியல் திருவிழா பயிற்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் விழிப்புணர்வு எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்த பயிற்சி நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுனர்கள் கணேசன், கிறிஸ்டோபர் ஆகியோர் வழங்கினர். இதில் கருத்தாளர்களாக ஸ்டெம் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா, கல்வி தன்னார்வலர் பத்மாவதி கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர். இதில் எஸ்.புதூர் ஒன்றிய இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்