அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி
போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டுதல் திட்டத்தின்கீழ் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் வேலுமனோகரன், செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் காஞ்சனாஅமர்நாத் பயிற்சியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போட்டி தேர்வுகள் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊரக நல அலுவலர் சுதாகர் பங்கேற்று பேசினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக பெண்கள் அரசு தேர்வுகளில் அதிகமாக வெற்றி பெறுகின்றனர். மாணவிகள் தங்களுக்கான தகுதிகளை வளர்த்து கொள்வதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். இதில், பேராசிரியர் ஹரிபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொழில் வழி காட்டுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.