உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் பிரபாகரன் மட்டும்தான் - சீமான்

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் பிரபாகரன் மட்டும்தான் என சீமான் கூறியுள்ளார்.

Update: 2022-11-26 15:48 GMT

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,

நமது மொழி, இனம், கலாச்சாரம், நிலம் ஆகியவற்றை இழந்து வருகிறோம். தன்னந்தனியே ஒரு நபராக இருந்து கொண்டு உள்நாட்டிலேயே தனது இனத்துக்காக போராடிய ஒரே தலைவர் பிரபாகரன்.

இன்று யார் யாரையோ தமிழின தலைவர்கள் என்று கொண்டாடுகிறார்கள். இவர்கள் வரலாறு தெரியாதவர்கள். 2 சினிமா படம் நடித்து விட்டால் தலைமீது தூக்கி வைத்துக்கொண்டு தலைவா என கோஷம் போட கூட்டம் இங்கு உள்ளது.

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் பிரபாகரன் மட்டும்தான். இவரை நாம் மறந்து விடக்கூடாது . அதனால்தான் ஆண்டுதோறும் இவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்