பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

Update: 2023-08-21 18:45 GMT

சிவகங்கை,

மதுரையில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொன்விழா மாநாட்டில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், கோபி மற்றும் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இளைஞரணி இணைச்செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் நடராஜன், இளைஞரணி செயலாளர் பிர்லாகணேசன், கூட்டுறவு சங்க தலைவர் சகாயராஜ், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் ராஜா, இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கோபி, துணைச்செயலாளர் ஜேம்ஸ் சேவியர் உள்பட ஆயிரக்கணக்கானோர் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கலந்துகொண்டனர். இதையொட்டி சிவகங்கை மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், எம்.எல்.ஏ கூறியதாவது:-

மதுரையில் அ.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து குடும்பத்துடன் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்