பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு; போராட்டத்தில் பங்கேற்க வந்த பி.ஆர்.பாண்டியன் கைது

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-09-17 08:20 GMT

காஞ்சிபுரம்,

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

காஞ்சீபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட வளத்தூர், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி என 12 கிராம பகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரந்தூரில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்திற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். கிராம மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் சென்று கொண்டிருந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட எல்லையான தொழுப்பேடு சுங்கச்சாவடியில் வைத்து பி.ஆர் பாண்டியனை கைது செய்து காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்