விசைத்தறி தொழிலாளி தற்கொலை

Update: 2023-06-21 18:57 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் வெப்படை அருகே வால்ராசபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுசீலா (வயது 40). இவரது கணவர் சந்திரசேகரன் (47). இவர்கள் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் சந்திரசேகரன் குடும்ப சூழ்நிலை காரணமாக நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கடனை கட்ட முடியாமல் வந்ததாக தெரிகிறது. மேலும் நிதி நிறுவனத்தினர் கடனை கேட்டு சந்திரசேகருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை பார்த்து அவரது மனைவி சுசீலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சந்திரகேரரை காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீலா வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்