சிவகங்கையில் இன்று மின்தடை
சிவகங்கையில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சிவகங்கை துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிவகங்கை நகர் பகுதி, வாணியங்குடி, மஞ்சுநகர், கீழக்கண்டனி, மேலவாணியங்குடி, சுந்தரநடப்பு, சாமியார்பட்டி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், வேம்பங்குடி, பையூர், ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டம், வஸ்தாப்பட்டி, சூரக்குளம், ஈசனூர், பெருமாள்பட்டி, சோழபுரம், காமராஜர் காலனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.