மின்சாரம் நிறுத்தம்

கமுதி, ராமேசுவரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-07-03 17:14 GMT

ராமேசுவரம், 

கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. கமுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கமுதி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான அபிராமம், முதுகுளத்தூர், பார்த்திப னூர், செங்கப்படை, பேரையூர், கீழராமநதி, மண்டல மாணிக்கம், பசும்பொன் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.

இதேபோல ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுரோடு, வேர்க்கோடு, துறைமுக பகுதி, எம்.ஆர்.டி. நகர், ராமகிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்