நாளை மின்சாரம் நிறுத்தம்
கீழக்கரை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கீழக்கரை,
கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழக்கரை டவுனுக்கு உட்பட்ட பகுதி களான 500 பிளாட், மேலத்தெரு, வள்ளல் சீதக்காதி சாலை, தெற்குத்தெரு, வடக்கு, சின்ன கடை, நடுத்தெரு, சேரான் தெரு, சாலை தெரு, சங்குவெட்டி தெரு, இந்து பஜார், தட்டான் தோப்பு மற்றும் சின்ன மயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரி, ஆழ்வார் கூட்டம், புது மயாகுளம், விவேகானந்த புரம் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.