மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் 5-ந் தேதி நடக்கிறது.
சிவகங்கை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 5-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சிவகங்கையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெறுகிறது. எனவே சிவகங்கை கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகள் குறித்த மனுக்களை கொடுத்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.