கார் மோதி சாய்ந்த மின்கம்பம்

கார் மோதி மின்கம்பம் சாய்ந்தது.;

Update: 2022-12-25 18:45 GMT


திண்டிவனம், 

சென்னை சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோபிநாத் (வயது 52). இவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார், திண்டிவனம் அடுத்த சலவாதி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில் மின்சம்பம் பாதியளவில் சாய்ந்தது. . அதிர்ஷ்டவசமாக கோபிநாத் காயமின்றி உயிர்தப்பினார். இதுகுறித்து ரோஷணை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்