பராமரிப்பு பணி: இன்று, நாளை மின்தடை

மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அரசரடி துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.;

Update: 2022-12-18 19:47 GMT


மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அதேபோல அரசரடி துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அருள்தாஸ்புரம், பாக்கியநாதபுரம், கே.டி.கே. தங்கமணி நகர், அசோக்நகர், களத்துபொட்டல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்