இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-08-21 18:45 GMT

காளையார்கோவில்

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கல்லல்

கல்லல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே கல்லல், அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூர், மாலைக்கண்டான், சாத்தரசம்பட்டி, கவுரிபட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டியூர், செம்பனூர், செவரக்கோட்டை, பெரிய சேவப்பட்டு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.

அமராவதிபுதூர்

அமராவதி புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளதால் அமராவதி புதூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பகுதி, தேவகோட்டை சாலை, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலையங்கோட்டை, எஸ்.ஆர்.பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தரசம்பட்டி ஊகம்பத்தி, மத்திய தொழில் பாதுகாப்பு படை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.

மறவமங்கலம்

காளையார்கோவில் அருகே மறவமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மறவமங்கலம், பால்குளம், குண்டாக்குடை, வளையம்பட்டி, பாஸ்டின் நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் அன்புநாதன் தெரிவித்தார்.

இளையான்குடி

இளையான்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. எனவே இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர், கீழாயூர்காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மானாமதுரை கோட்ட செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்