விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதைவட மின் கேபிள் மூலம் மின் வினியோகம் செய்யப்படும் நிலையில் இப்பகுதியில் விருதுநகர் நகராட்சியின் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, இளங்கோவன் தெரு, வருமானவரி துறை அலுவலகம், ரோசல் பட்டி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.