விழுப்புரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
விழுப்புரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டி மேடு, வடக்கு தெரு, வீராட்டி குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமத்தூர், ஓம் சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார் குப்பம், பொய்யப்பாக்கம், நாராயண நகர், ஆனாங்கூர், கீழ்ப்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாத சுவாமி நகர், மாதிரி மங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டம் பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், கோலியனூர்கூட்டுரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.