வட சிறுவள்ளூர் தாவடிப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
வட சிறுவள்ளூர் தாவடிப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
சங்கராபுரம்
சங்கராபுரம் மற்றும் ஆலத்தூர் துணை மின் நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடசிறுவள்ளூர், வடசெட்டிந்தல், மஞ்சபுத்தூர், ராமராஜபுரம், விரியூர், பழையனூர், ஆரூர், வரகூர், வளையாம்பட்டு, அரசராம்பட்டு, திம்மனந்தல் மற்றும் திருக்கனங்கூர், தாவடிப்பட்டு, மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.