பொன்னமராவதி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பொன்னமராவதி பகுதியில் நாளை மின்நிறுத்தப்படுகிறது.
பொன்னமராவதி:
கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், பொன்னமராவதி, வேந்தன்பட்டி, தொட்டியம்பட்டி, பிடாரம்பட்டி, வார்ப்பட்டி, வேகுப்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, மைலாப்பூர், ஆலவயல், நகரப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.