குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-07-13 18:45 GMT

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ் நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாச்சி, பொட்டவெளி, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள் மருவாய், அரங்கமங்கலம், ராசாக்குப்பம் பெத்தநாயக்கன்குப்பம், நைனார் குப்பம், கொளக்குடி, கருங்குழி, வெங்கட்டங்குப்பம், ஆடூர் அகரம், வரதராஜன் பேட்டை, கல் குணம், ஆடூர் குப்பம், கண்ணாடி, கள்ளையங்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், பூதம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி.நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பணிக்கன் குப்பம், மாளிகம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்தூர், அங்கு செட்டிப்பாளையம், கொக்குப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் குறிஞ்சிப்பாடி சண்முகம், பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்