காரையூர், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் நாளை மின்தடை

காரையூர், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

Update: 2023-02-02 18:32 GMT

மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இ்ங்கிருந்து மின்வினியோகம் பெறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை, சூரப்பட்டி, மேலத்தானியம், காரையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

கொடிக்குளம், ஆவுடையார்கோவில், வல்லவாரி, அமரடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், ஆவுடையார்கோவில், கரூர், திருப்புனவாசல், அரசர்குளம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்