கல்லல், இளையான்குடி பகுதிகளில் நாளை மின்தடை

கல்லல், இளையான்குடி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது

Update: 2023-07-16 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மானாமதுரை கோட்ட செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். கல்லல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. எனவே கல்லல், சிறுவயல் ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூர், மாலைகண்டான், சாத்தரசம்பட்டி, கவுரிபட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டியூர், செம்பனூர், செவரக்கோட்டை, பெரிய சேவப்பட்டு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்