சின்ன ஆண்டான்கோவில், எஸ்.வெள்ளாளப்பட்டியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சின்ன ஆண்டான்கோவில், எஸ்.வெள்ளாளப்பட்டியில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கரூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சின்ன ஆண்டான்கோவில், அம்மன் நகர், ராசி நகர், மகாத்மா நகர் மற்றும் கரட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
எஸ்.வெள்ளாளப்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளப்பட்டி, போக்குவரத்து நகர், தில்லைநகர், அரசு மருத்துவக்கல்லூரி பகுதிகள், மேலப்பாளையம், சனபிரட்டி, குமரன் குடில் விஸ்தரிப்பு, சிட்கோ, தமிழ் நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. புலியூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சின்ன கிணத்துப்பட்டி, மைலம்பட்டி, குண்டாங்கள் பட்டி, லட்சுமணம்பட்டி, குப்பகவுண்டனூர், வெண்ணிலை, அலரிகவுண்டனூர், குமைபட்டி, வீரியம்பட்டி, கே.பி. குளம், நத்தமேடு, மணவாசி, வளையல்காரன் புதூர், சாலைபட்டி, மதுக்கரை, பூஞ்சோலை புதூர், கருப்பூர், ராசாப்பட்டியான் புதூர், கஞ்சமனூர், வேலாயுதம்பாளையம், செல்லாண்டிபட்டி, கஞ்சமனூர், உப்பிடமங்கலம், கிழக்கு-மேற்கு பழைய ரெங்கபாளையம், புது ரங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் மின்வினியோக வட்ட செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.