கூத்தாநல்லூர்:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வடபாதிமங்கலம் மின்உதவி பொறியாளர் பிரேம்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதால்,
வடபாதிமங்கலம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஓகைப்பேரையூர், நாகராஜன் கோட்டகம், ராமானுஜ மணலி, சித்தனங்குடி, மூலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.