நாளை மின்சாரம் நிறுத்தம்
எரியோடு, பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
எரியோடு துணை மின்நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, பாகாநத்தம், குண்டான்பட்டி, கோட்டைகட்டியூர், நல்லமநாயக்கன்பட்டி, சித்தூர், வரப்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, காமனம்பட்டி, அருப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் பாளையம், தி.கூடலூர், குஜிலியம்பாறை வடக்கு, ஆனைப்பட்டி, வான்ராயன்பட்டி, அணியாப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று குஜிலியம்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.