நாளை மின்சாரம் நிறுத்தம்

ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-05-04 19:07 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சத்திரப்பட்டி

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி துணை மின் நிலையம், முடங்கியார் துணை மின் நிலையம், சேத்தூர் துணைமின் நிலையம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழ ராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டை மில் முக்கு ரோடு, தாலுகா ஆபிஸ், பச்ச மடம், ஆவரம்பட்டி, காந்தி கலை மன்றம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சேத்தூர்

அதேபோல மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, ரெயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்பந்தபுரம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, நல்ல மங்கலம், மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லம் கொண்டான், தளவாய்புரம், முகவூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.

கலங்காபேரி

தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சுதர்சனம் மில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் கலங்காபேரி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், முத்துலிங்கபுரம், கம்மாபட்டி ரோடு, ராஜீவ் காந்தி நகர், லீலாவதி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்