நாளை மின்சாரம் நிறுத்தம்

மலலாங்கிணறு, சத்திரப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-11-16 19:07 GMT

மல்லாங்கிணறு, 

மலலாங்கிணறு, சத்திரப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மல்லாங்கிணறு

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லாங்கிணறு, நந்திக்குண்டு, ஏ.ரெட்டியபட்டி, ஏ.கோவில்பட்டி, சந்திரன்குளம், திம்மன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

ராஜபாளையம்

அதேபோல ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்