நாளை மின்சாரம் நிறுத்தம்

விருதுநகர், பாளையம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-07-04 19:58 GMT

அருப்புக்கோட்டை,

விருதுநகர், பாளையம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பாளையம்பட்டி

அருப்புக்கோட்டை மற்றும் பாளையம்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

ஆதலால் கட்டக்கஞ்சம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி,கஞ்சநாயக்கன்பட்டி பைபாஸ்ரோடு, ராமசாமிபுரம், சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரி, நாராயணபுரம், ஆத்திப்பட்டி, பந்தல்குடி ரோடு, அரசு மருத்துவமனை, டவுன் போலீஸ் ஸ்டேஷன், பட்டாபிராமர் கோவில் தெரு, பாளையம்பட்டி, கோபாலபுரம், திருகுமரன் நகர், வேல்முருகன் காலனி, சிலோன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் மின் கோட்டத்தில் நாளை (புதன்கிழமை) மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் விருதுநகர் காந்திபுரம் தெரு, ெரயில்வே பீடர் ரோடு, சின்ன பள்ளிவாசல் தெரு, ஏ.எஸ்.எஸ். ரோடு, அம்பேத்கர் நகர், ராமமூர்த்தி ரோடு, காந்திபுரம் தெரு, பெ.சி. தெரு, காசுக்கடை பஜார், கே. உசிலம்பட்டி, சத்திரரெட்டியபட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. ஆர்.எஸ்.நகர், சூலக்கரை, ஆயுதப்படை குடியிருப்பு, கூரைக்குண்டு, மாத்தி நாயக்கன்பட்டி, நந்திக்குண்டு ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மத்திய சேனை, உப்பு ஓடை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

மேலும் விருதுநகர் கட்டையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்