நாளை மின்சாரம் நிறுத்தம்
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
விருதுநகர் பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இந்நகர் ஐ.சி.ஏ. காலனி, கம்மாபட்டி, கால்நடை மருத்துவமனை சாலை, எப்.எப்.ரோடு, லிங்க் ரோடு, பால் பண்ணை ரோடு, மணிநகரம், கே.வி.எஸ். நூற்றாண்டு விழா பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகர், திருவண்ணாமலை, சண்முகசுந்தராபுரம், ஆலடிப்பட்டி, மாதா நகர், தாமரை நகர், குன்னூர், லட்சுமிபுரம், நத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், மாயிருளம் பட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், தைலாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்வினிேயாகம் இருக்காது என மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார். ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள சேத்தூர் பீடர், சோலைசேரி பீடர் ஆகிய பகுதிகளில் மின்சார சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே சேத்தூர், மேட்டுப்பட்டி, சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், சுந்தரநாச்சியாபுரம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.