நாளை மின் நிறுத்தம்
மெலட்டூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்;
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மெலட்டூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெலட்டூர், காந்தாவனம், அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, எடக்குடி, திட்டை, முருக்கங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. மேலும் மின் தடை தொடர்பாக 94987-94987 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.