நாளை மின்சாரம் நிறுத்தம்
கொடைரோடு, பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அம்மையநாயக்கனூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை, முருகத்தூரன்பட்டி, சாண்டலார்புரம், பள்ளப்பட்டி சிப்காட், பொட்டிக்குளம், பள்ளப்பட்டி, மாவூர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல் அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கே.சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, செங்கட்டான்பட்டி, மருதாநதி அணை, கோம்பை, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி, போடிகாமன்வாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.