நாளை மின்நிறுத்தம்

திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-14 19:52 GMT

திருக்காட்டுப்பள்ளி துணைமின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புபணி நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி, கச்சமங்கலம், மாரநேரி, இளங்காடு, செய்யமங்கலம், ரெங்கநாதபுரம், பாதிரக்குடி, கல்லணை, கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, சுக்காம்பார் பூண்டி, நாகாச்சி, விஷ்ணம்பேட்டை, வானராங்குடி, பொதகிரி, கூத்தூர், மகராஜபுரம், வடுககுடி, சாத்தனூர்,

வளப்பக்குடி, மன்னார்சமுத்திரம், மைக்கேல்பட்டி, கண்டமங்கலம், வரகூர், கருப்பூர், மணத்திடல், செந்தலை, அம்பதுமேல்நகரம், கடம்பன்குடி, நடுக்காவேரி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அதேபோல் திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவையாறு உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்