நாளை மின்சாரம் நிறுத்தம்
பொன்னகரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.;
திண்டுக்கல் துணை மின்நிலையத்தின் தொழிற்பேட்டை உயர்அழுத்த மின்பாதையில் நாளை (சனிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி, பொன்னகரம், நல்லாம்பட்டி, காவேரிநகர், எம்.ஆர்.எப்.நகர், மாருதிநகர், சமத்துவபுரம், வேடப்பட்டி, யாகப்பன்பட்டி, மருதாசிபுரம், ரெஜினாநகர், ஞானநந்தகிரிநகர், எம்.ஜி. ஆர்.நகர், மொட்டணம்பட்டி ரெயில்வே கேட், அந்தோணிநகர், மேட்டுப்பட்டி, சாமிகண்ணு தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை திண்டுக்கல் தெற்கு உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.