நாளை மின்சாரம் நிறுத்தம்
நிலக்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், கே.புதூர், அப்பாபிள்ளைபட்டி, குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலிநாயக்கன்பட்டி, காலாடிபட்டி, அவையம்பட்டி, மணியகாரன்பட்டி, பங்களாப்பட்டி, சீத்தாபுரம், தோப்புப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை நிலக்கோட்டை மின்வாரிய பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்